20க்கு வாக்களிக்காததேன்? மைத்ரி விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday, 23 October 2020

20க்கு வாக்களிக்காததேன்? மைத்ரி விளக்கம்!

 


19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி அதற்கு ஒப்பமிட்டவன் என்ற அடிப்படையில் 20ம் திருத்தச் சட்டத்துக்கு தான் வாக்களிப்பது முறையில்லையென்றே நேற்றைய தினம் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லையென விளக்கமளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்தினை அப்போதைய ஜனாதிபதியென்ற அடிப்படையில் மைத்ரிபால சிறிசேன அங்கீகரித்திருந்தார். இந்நிலையில் 20ம் திருத்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதிலிருந்து அவர் தவிர்த்துக் கொண்டுள்ள அதேவேளை, 18 மற்றும் 19க்கும் வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கும் வாக்களித்துள்ளனர்.


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொந்த அரசியல் இலாபம் கருதி 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்துள்ள அதேவேளை இரு கட்சிகளது தலைவர்களும் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டுள்ளதன் பின்னணியில் முக்கிய 'ஏற்பாடுகள்' இருப்பதாக மக்கள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment