அரசின் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்துக்கு மூன்று புதிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு இணங்கியுள்ள ஜனாதிபதி அதனை அமைச்சரவையில் முன் வைத்து விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக அமைச்சரவை எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தி வைத்தல், தேசிய பாதுகாப்பு மற்றும் அவசர நிலையின் போது மாத்திரம் 'அவசரகால' சட்டமூலங்களைக் கொண்டு வருதல், மற்றும் 19ம் திருத்தச் சட்டத்தின் ஏனைய முக்கிய சரத்துக்களையும் பாதுகாத்த்தல் போன்ற விடயங்கள் இணங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நவம்பரில் தனது ஆட்சியின் இரண்டாவது வருடம் ஆரம்பிக்க முன்பதாக புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரப் போவதாக ஜனாதிபதி ஏலவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment