நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் இடப் பற்றாக்குறை நிலவுவதாகவும் புதிதாக 2000 பேரைத் தங்க வைப்பதற்கான முகாமொன்று உருவாக்கப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் இராணுவ தளபதி.
தற்சமயம் 10,500 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ள அவர், புதிய நிலைமை கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், புதிய வசதிகளுடன் மேலதிக தயார்படுத்தல் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை, இம்முறை மினுவங்கொடயில் கண்டறியப்பட்ட முதலாவது பெண்ணுக்கு முன்பாகவே செப்டம்பர் 10ம் திகதியளவில் அங்கு கொரோனா தொற்றிருந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறு உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment