தற்போது தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அங்கு நியாயம் கிடைத்த பின்னர் வெளியில் வருவார் என தெரிவிக்கிறது அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
இன்றைய தினம் அக்கட்சி சார்பில் இது தொடர்பில் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு விளக்கமளித்துள்ளதுடன், இது குறித்து கருத்து வெளியிட்ட சட்டத்தரணி என்.எம். ஷஹீத், ரிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு போலியானது எனவும் சம்பந்தப்பட்ட கட்டணம் அரச நிறுவனம் ஒன்றிலிருந்தே செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏலவே, இது தொடர்பில் பல தடவைகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு முறையும் தவறாது அவர் சமூகமளித்திருந்ததாகவும் இம்முறை சட்ட நடவடிக்கை என்ற பெயரில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அதனாலேயே அவர் நீதிமன்றை நேரடியாக நாட வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவும் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment