20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க 600 மில்லியன் ரூபா பேரம் பேசி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏமாந்து போயுள்ளதாக தெரிவிக்கிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
குறித்த நபர், தொடர்ச்சியாக 20க்கு எதிராக பேசி வந்த நிலையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அவருடன் பேரம் பேசி, ஆதரவாக வாக்களித்தால் 600 மில்லியன் ரூபா பணம் தருவதாக இணக்கம் கண்டுள்ளனர்.
எனினும், வாக்களிப்பு முடிந்த பின் பணம் பெற வரச் சொன்ன இடத்துக்கு தருவதாகச் சொன்னவர்கள் வராத நிலையில் குறித்த நபர் ஏமாற்றப்பட்டிருப்பதாக தேரர் விளக்கமளித்துள்ளார். ஏமாற்றப்பட்டவரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என தேரர் தெரிவிக்கின்றமையும் முஸ்லிம் MP க்கள் தாம் 'அமைச்சு' பதவிகளை எதிர்பார்க்கவில்லையென மாத்திரம் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தகக்து.
1 comment:
அதி முக்கியம் என்னென்டா பாருங்கோ. இந்தக்காலத்தில் மந்திரிப் பதவியால எதனையும் சாதிக்க முடியாதுங்க. வீணான அலைச்சல்தான் மிச்சம். பசில் சேர் அமைச்சராக வந்தால் அமைச்சுப் பதவிகளின் அதிகாரங்கள் அனைத்தும் ஒருவரிடம் மட்டும்தான் இருக்கும். குசு விடுறதுன்னாலும் அவருக்கிட்டக் கேட்டுட்டுத்தான் விடனும். வெளங்கி எடுத்தால் சரிங்க. ஏதோ எரியுர வீட்ல புடுங்குற லாபம்னு 500 அல்லது 600 மில்லியன் காசை உருவிக்கிட்டு ஓடிட்டா சரி பாருங்கோ.
Post a Comment