முன் கூட்டியே 2ம் தவணை விடுமுறை! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 October 2020

முன் கூட்டியே 2ம் தவணை விடுமுறை!

 


கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 9ம் திகதி வழங்கப்படவிருந்த இரண்டாந் தவணை விடுமுறையை நாளை முதல் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது கல்வியமைச்சு.


கம்பஹா, திவுலுபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணி புரிந்த 39 வயது பெண் கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியிலேயே அங்கு பாடசாலைகளை மூட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேசிய ரீதியாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment