கம்பஹா, திவுலபிட்டியவைச் சேர்ந்த 39 வயது பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து அவரோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாகக் கருதப்படும் 100 பேரளவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையொன்றில் குறித்த பெண் பணியாற்றியிருந்த அதேவேளை அக்கட்டிடத்தில் சுமார் 400 பேர் தொழில்புரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் மினுவங்கொட பகுதியில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்றிரவு கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையிலேயே தெரியவந்துள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விள்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளுக்கான இரண்டாந்த தவணை விடுமுறை நாளை ஆரம்பம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment