நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரிக்குமாறு கோரி 100 ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் கூட ஒப்படைக்காது விடுதலை செய்திருப்பதாகவும் இது தொடர்பில் விசாரிக்குமாறும் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளோடு தொடர்பிருந்ததாகக் கூறப்பட்ட ரியாஜுக்கு எதிராக சாட்சியங்கள் எதுவுமில்லையென விடுதலையான பின்னர் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment