ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தம்மோடு இணைந்து போட்டியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது சமகி ஜன பல வேகய.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வழைப்பை விடுத்துள்ளதுடன் இரு தரப்புக்கும் சாதகமான உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளத் தயார் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் சஜித் அணி தனித்துப் போட்டியிட்டு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள அதேவேளை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment