அத்துராலியே ரதன தேரர் தொடர்ந்தும் அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு முயன்று வருவதாக அக்கட்சியின் தலைவர் தெரிவிக்கிறார்.
தேசியப்பட்டியலுக்காக ரதன - ஞானசார தேரர்கள் முரண்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அதனைத் தனதாக்கிக் கொண்ட கட்சியின் செயலாளர் விமலதிஸ்ஸ தேரர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளார். எனினும் அவரை ரதன தேரரே கடத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரசின் முக்கிய அரசியல்வாதிகளைக் கொண்டாவது எம்.பி பதவியைப் பெற்றுக்கொள்ள ரதன தேரர் முயன்று வருவதாக குறித்த நபர் தெரிவிக்கிறார். இதேவேளை, ஞானசார குழு ஏலவே கடத்தல், மிரட்டல், காயப்படுத்தலுடன் விமலதிஸ்ஸவை தேடி வருகின்றமையும், இதற்கு முன் ஸ்ரீலங்கா பொலிசார் மூன்று விசேட படையணிகளை களமிறக்கியும் ஒளிந்திருந்த ஞானசாரவை பிடிக்க முடியாமல் போயிருந்த வரலாறு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment