இழுபறிக்குள்ளாகியுள்ள அபே ஜன பல கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஞானசாரவுக்கே வழங்க வேண்டும் என கட்சி மட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், வேட்பாளராக நிராகரிக்கப்பட்ட ஞானசாரவுக்கு உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது எனவும் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் முன்னர் ரதன தேரர் விளக்கமளித்திருந்தார். அத்துடன் இரு தேரர்களுக்கிடையிலான முறுகலுக்கு நடுவே கட்சி செயலாளராக இருந்த விமலதிஸ்ஸ தேரர் தேசியப்பட்டியலை தனதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், அவரை ரதன தேரரே மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வெளியிட்டு வந்த கட்சியினர் அதனை ஞானசாரவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றமையும் விமலதிஸ்ஸ தேரர் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment