மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சொக்கா மல்லியென அறியப்படும் பிறேமலால் ஜயயேசகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கத் தகுதியில்லையென சட்டமா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், அதையும் மீறி குறித்த நபரை நாடாளுமன்ற உறுப்பினராகப் சத்தியப்பிரமானம் செய்து வைப்பதில் பெரமுன தரப்பு மும்முரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சிறைச்சாலை நிர்வாகம் இது தொடர்பில் குழம்பிப் போயுள்ளதுடன் நீதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அதன் பின்னர் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது. ஏலவே சபாநாயகர் குறித்த நபரை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment