ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டு விட்டதாக நேற்றைய தினம் உலவிய செய்தியை மறுத்துள்ளது அக்கட்சி.
தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியலும், ஞானசாரவின் அபே ஜன பல கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியலும் கிடைத்துள்ள போதிலும் இரு கட்சிகளின் நியமனமும் இழுபறிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஆங்கில பத்திரிகையொன்றில் ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டு விட்டதாக வெளிவந்த செய்தியையே அக்கட்சி மறுத்துள்ளதுடன் தேசியப் பட்டியல் நியமனம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment