நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து வருடங்களில் ஓய்வூதியம் வழங்குவது தேவையற்றது என விசனம் வெளியிட்டுள்ளார் அஸ்கிரிய பீட அனுநாயக்கர் உபாலி தேரர்.
நாடாளுமன்ற உணவகத்தின் வருடாந்த செலவு மாத்திரம் 12 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இவை போன்ற அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து நாட்டை முன்னேற்றுவதற்கு வழி செய்ய வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு இதற்கு முன்னர் இருந்த எந்த தலைவருக்கம் 'உண்மையான' நோக்கம் இருக்கவில்லையெனவும் தேரர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment