தற்போது அமுலில் இருக்கும் அரசியல் யாப்பு ஜே.ஆர். ஜயவர்தன தனி மனிதனாக உருவாக்கிய யாப்பு என சொல்வது தவறு எனவும் எந்த ஒரு நாட்டின் அரசியல் யாப்பும் அவ்வாறு உருவாக்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லையெனவும் தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.
பெரும்பாலும் பெரமுன தரப்பினரே ஜே.ஆரின் யாப்பு என அடிக்கடி சொல்லி வரும் நிலையில் அவ்வாறு சொல்வது தவறு என அவர் விளக்கமளித்துள்ளார்.
அது போல புதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசேட நிபுணர்கள் குழுவே அதற்கான பணியை மேற்கொள்ளும் எனவும் தனி மனிதனால் புதிய யாப்பு உருவாக்கப்படப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment