ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் அவர் சார்ந்த 'சேவ் த பேர்ள்ஸ்' அமைப்புக்கு கட்டார் சரிட்டியெனும் தீவிரவாத அமைப்பு 13 மில்லியன் ரூபா பணம் கொடுத்திருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.
இதனை எதிர்த்து வாதிட்ட ஹிஜாஸின் சட்டத்தரணி, குறித்த தொண்டு நிறுவனம் கட்டார் அமீரின் தலைமையில் செயற்பட்டு வருவதோடு இலங்கை அரசுக்கும், ஐ.நா உட்பட முக்கிய உலக நிறுவனங்களுக்கும் உதவும் நிறுவனம் என்பதை இலகுவாக கூகிளில் தேடியிருந்தால் கூட கண்டுபிடித்திருக்கலாம் என விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், குறித்த நிறுவனத்தை சவுதி - கட்டார் முறுகல் காரணமாக சவுதி அரேபிய அரசு மாத்திரமே தீவிரவாதத்துக்கு உதவும் அமைப்பெற கூறி வருவதாகவும் இவ்வாறு முற்று முழுதும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே ஹிஜாஸ் மீது சுமத்தப்பட்டிருப்பதாகவும் தனது வாதத்தை முன் வைத்துள்ளார். எனினும் ஹிஜாஸின் பிணையை நவம்பர் 23ம் திகதியே பரிசீலிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment