பூஜித - ஹேமசிறியின் விசாரணைகள் முடிவு: CID - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 September 2020

பூஜித - ஹேமசிறியின் விசாரணைகள் முடிவு: CID



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரிடமான விசாரணைகள் முடிந்து விட்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.


ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உளவுத்தகவல்களைப் பெற்றும் உரிய முறையில் செயற்படாததன் பின்னணி பற்றிய விசாரணைகளே முடிவுற்றுள்ள நிலையில் குறித்த நபர்களுக்கு எதிரான மேலதிக நடவடிக்கைகளை சட்டமா அதிபர் ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்கும்படி பொலிஸ் மா அதிபரை அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியதாக ஹேமசிறி பெர்னான்டோ சர்ச்சையைக் கிளப்பியிருந்ததன் பின்னணியில் மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் விசாரணைக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment