கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வியாழக்கிழமை (24) நான்கு கணினிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகம் கல்குடா - நாசிவன்தீவு ஈஸ்ட் லங்கா பொலிசெக் நிறுவனத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஐ.எஸ். முகம்மட் கணினிகளை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற கணினி கையளிக்கும் இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜாபீர் கரீம், பாடசாலை ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையில் 500 இற்கும் மேற்பட்ட மாணவிகள் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்தினை கற்று வருகின்றனர். குறித்த மாணவர்களின் தொகைக்கேட்ப சுமார் 40 கணினிகள் தேவைப்பாடாக காணப்படுகின்றன.
அந்தவகையில், எமது பாடசாலை ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக எமக்கு நான்கு கணினிகள் தற்போது கிடைத்துள்ளது. மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகளை இலகு படுத்த இன்னும் கணினிகள் தேவைப்பாடாக உள்ளது.
எனவே, மாணவிகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த அனைவரும் முன்வந்து தங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்கி குறித்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என்று பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் வேண்டிக் கொண்டுள்ளார்.
பாடசாலை மாணவிகளின் தேவைப்பாட்டை கவனத்தில் கொண்டு கணினிகளை அன்பளிப்பு செய்த குறித்த நிறுவனத்திற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment