அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எவ்வாறாயினும் தனதாக்கிக் கொள்வதற்காக அக்கட்சியின் செயலாளரைக் கடத்தி வைத்திருப்பதாக ரதன தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தனக்கு அப்பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆளுங்கட்சியின் உதவியை நாடியுள்ள ரதன தேரர் தனது அலுவலகத்தையும் தயார்படுத்தியுள்ளார்.
எனினும், தற்போது குறித்த கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவர் தேசியப் பட்டியல் தனக்கே உரித்தாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் குறித்த பதவிக்குத் தனது பெயரை முன்மொழிந்த விமலதிஸ்ஸ தேரர் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றமையும் அவரை ஞானசார குழு தீவிரமாகத் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment