ஈஸ்டர் தாக்குதல் பற்றி கத்தோலிக்க பேராயர்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கக் கூடும் என அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்திருந்த கருத்திற்கு கொழும்பு பேராயர்கள் கூட்டாக கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் மறுதலித்துள்ளனர்.
ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கத்தோலிக்க பேராயர் தலைமையில் வழமையாக இடம்பெறும் வழிபாடு நடக்காதமை குறித்து சந்தேகம் வெளியிட்டிருந்த ஹரின் கார்டினலுக்கு முன் கூட்டியே தகவல் தெரிந்தமை காரணமாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது கத்தோலிக்க பேராயர்கள் தமது மறுப்பை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment