முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஏற்ற விசேட பதவியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ச உருவாக்கவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தயாசிறி ஜயசேகர.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்ததாகவும் தமது தரப்பில் யாரும் மைத்ரிக்கு பதவி வழங்குமாறு கோரிக்கை விடுக்கவில்லையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறு எதுவும் வழங்கப்படாத நிலையில் ஸ்ரீலசுக அவ்வப்போது தனித்தியங்குவது குறித்தும் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment