19ம் திருத்தச்சட்டத்துக்கு அமைவாக இரட்டைக் குடியுரிமையுள்ள ஒரு நபர் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவாக முடியாது என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, தேசியப்பட்டியல் ஊடாக நடாளுமன்றுக்கு வர முடியாது என எந்தத் தடையும் இல்லையென்கிறார் ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர.
பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு ஏதுவாக 20ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பரவலான நம்பிக்கை நிலவுகிறது. இந்நிலையிலேயே ஜனக இவ்வாறு தெரிவிக்கிறார்.
இந்நாட்டில் பிறந்து, வாக்குரிமையுள்ள ஒரு நபருக்கு நாடாளுமன்றம் மாத்திரம் செல்ல முடியாமல் இருப்பது ஏன்? என அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ள அதேவேளை ஜனாதிபதியாவதற்காக கோட்டாபே ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment