பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கஞ்சா வியாபாரியை சுற்றி வளைத்துக் கைது செய்த பொலிசார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடாத்தியதன் பின்னணியில் அப்பகுதியில் சற்று பதற்றம் உருவாகியுள்ளது.
இதனையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment