ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என விசாரணைக்குழு சாட்சியத்தின் போது தெரிவித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
ஏப்ரல் மாதம் 9ம் திகதியே தாக்குதல் பற்றி தனக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை சிரேஷ்ட டிஐஜிக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட படைப்பிரிவினரின் பொறுப்புகதாரிகளுக்கு வழங்கியதோடு ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விளக்கியிருந்ததாகவும் ஆனாலும், பின்னர் விசாரணையின் போது தமது தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மைத்ரிபாலவின் சகோதரரே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதானியாக இருந்ததனால் இது பற்றி விரிவான விசாரணை நடாத்த வேண்டும் எனவும், தான் இவ்வாறு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதை கண்காணித்து வந்த தேசிய புலனாய்வுப் பிரிவு தன்னைப் பிரத்யேகமாக நோட்டமிட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதியாக தெஹிவளையில் தற்கொலை செய்து கொண்ட குண்டுதாரி சம்பவத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளை சந்தித்துள்ளதாகவும் அவர் மேலும் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment