இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்த பின் உருவாகக் கூடிய பிரச்சினைகளைக்கு முகங்கொடுக்கவும் மாடுகளைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து விசேட ஆய்வு நடாத்தப்படுவதாக தெரிவிக்கிறார் கால்நடைகள், பால் - முட்டைக்கான இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்.
தற்சமயம் ஒரு மாத காலத்துக்கு திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படினும் அரசியல் ரீதியாக பயனடையும் நோக்கில் அரசாங்கம் மாடறுப்பை பேசு பொருளாக்கியிருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாடறுப்புத் தடை ஊடாக வரக்கூடிய சவால்களை சமாளிக்க அரசு தயாராகி வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
மாடறுப்புக்கான தடை இங்கு அமுலாகுமிடத்து பல நன்மைகளும் நாட்டுக்குப் பாதகமான விடயங்களும் நிகழாமல் இருக்கப் போவதில்லை. அவை சற்றுப் பினவருமாறு:
01 - முஸ்லிம்கள் தமது பணத்தை மீதப்படுத்தலாம். தவிர இருதய நேயால் மிக அதிகளவில் பாதிக்கப்படுவோர் முஸ்லிமகள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. காலகதியில் இத் தொகை மிகவும் குறையலாம்.
02 - மாட்டிறைச்சி தடுக்கப்படுவதனால் மாடுகள் பெருகுவதற்கு அதாவது நாய்கள், பன்றிகள், எலிகள், பூனைகள் போன்ற மிருகங்களும் வெளவால், காகம் போன்ற பறவைகளும் பெருகுகின்ற விதத்தில் மாடுகளும் பெருகுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. இதனால் "மாடுசன மதிப்பீடு" என்பனவற்றை பெரும் செலவில் ஒவ்வோர் ஆண்டிலும் நடாத்த வேண்டி ஏற்படும்.
03 - இலங்கையில் மிகவும் பெரும்பாலான மாட்டுப் பண்ணைகளின் ஏகபோக உரிமையாளர்கள் 90% பௌத்த மக்களே. தொடர்ந்தும் அவரகளே இருப்பார்கள். இலங்கையின் வட கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் அமைந்துள்ள இறைச்சிக கடைகளின் உரிமையாளர்கள் பெரும்பான்மை இனத்தவரகளே. முஸ்லிம்கள் ஹலால் இறைச்சியினைத்தான் வாங்குவார்கள் என்பதற்காக அங்கு முஸ்லிம்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் என்ற போர்வையில் பணி புரிகின்றனர்.
04 - மாட்டு இறைச்சி வர்த்தகத்தில் கோடிக் கணக்கான ரூபாக்கள் புரளுகின்றன. உள்ளுராட்சி மன்றங்களின் டெண்டருக்கே பல கோடிக்கணக்கான ரூபாக்கள் சென்று விடுகின்றன. இறைச்சி தடைசெய்யப்பட்டால் கள்ள இறைச்சி விற்பனை அதிகரிக்கலாம். இலங்கையில் அரசே பல்வேறு வகையான தொழில்களை சட்டபூர்வமாக்கவில்லை. உதாரணத்திற்கு போதை வஸ்த்து கசினோ சூதாட்ட நிலையங்கள் விபச்சார நிலையங்கள். இவை திருட்டுத்தனமாக நடைபெறவில்லையா? நாட்டில் பரவலாக நடைபெறுகின்றதாக பத்திரிகைச் செய்திகள் நயம்பட உரைக்கின்றன.
05 - மாட்டிறைச்சிக்குத் தடையா அல்லது மாடு அறுப்புக்குத் தடையா? இவ்விவகாரம் இன்னமும் அநேகமானோருக்கு விளங்கவில்லை. மாடறுப்புக்குத் தடை என்றால் காலம் காலமாக இலங்கை மக்களின் பிரதான உணவாகக் கொள்ளப்படும் மாட்டிறைச்சிப் பாவனையை அரசு ஒழிக்குமா? அல்லது இறைச்சியினை அரசு இறக்குமதி செய்யுமா?. அதற்கான விலையைக் கொடுப்பகதற்கு அரசுக்கும் பாவனையாளர்களுக்கும் முடியுமா? சரியப்பா என்று மாட்டிறைச்சியினை இறக்குமதி செய்தால் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் அறுக்கப்பட்ட இறைச்சியினையே மக்கள் பாவனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிவரும். பெரும் பெரும் அறிஞர்களும் மேதாவிகளும் புத்திஜீவிகளும் மத அறிஞர்களும் வாழ்ந்து வரும் இந்நாட்டில் மாட்டினை அறுப்பது தெய்வ நிந்தனை என்பது காலம் காலமாக இவற்றை எல்லாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வறிவாளிகள் ஏன் இதுபற்றி எதுவித மறுப்பு வார்த்தையையும் வெளியிடவில்லை.
06 - மாடடு இறைச்சியினை இறக்குமதி செய்யலாம் என்ற கோஷம் தற்போது வெளிப்படுகின்றது. மாட்டைக் கொல்லக்கூடாது என்றால் அதனுடைய இறைச்சியினை உண்பது எப்படிக்கூடும். சட்டவாதிகள் நியாயவாதிகள் தீர்ப்பளிப்பவரகள் எந்த விடயத்திலும் நியாயமுள்ளவரகளாகவே நியாயமாகவே நடந்து கொள்ள வேண்டும். அவரகள் மக்களுக்குப் பயப்படத் தேவை இல்லை. மக்கள் என்ன செய்வார்கள். பாவம். அவரகள் பணத்தின் பின்னால் செல்பவரகள். ஆனால் அரசன் இறைவனுக்கு முதலில் பயப்படட்டும். அவரகள் இங்கும் இறந்தபின்னரும் இறைவனுக்குப் பதில் அளிக்க வேண்டியவரகள்.
Post a Comment