அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திவந்த முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இன்னிலையில் இந்த சுற்றுப்போட்டியின் காலிறுதிப் போட்டி மற்றும் அரையிறுதி போட்டிகள் தற்போது மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
சுற்றுப் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று (02) இடம்பெற்றன. இந்தப் போட்டியில் மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் (04-00) என்ற கோல் வித்தியாசத்தில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக்களகம் மோதிய காலிறுதிப் போட்டியில்; மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் (03-01) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுப் போட்டியில், கல்முனை லக்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி மோதிய காலிறுதிப் போட்டியில் கல்முனை லக்கிஸ்டார் அணி (05.02) என்ற கோல் வித்தியசத்தில் வை.எஸ்.எஸ்.சி அணியை வீழ்த்தி வெற்றி கொண்டு அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
கல்முனை லக்கிஸ்டார் அணிக்கும் மருதமுனை எவரடி அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 06 ஆம் திகதி மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளுக்கு அதிதிகளாக சட்டத்தரணிகளான கரீம் றிப்கான், அனோஜ் பிர்தௌஸ், எம்.ஏ.எம். முபீன், றிச்மேன் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.மாலிக் பைறூஸ், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் வை.கே.ரஹ்மான், செயலாளர் எம்.ஐ.எம்.மனாப், பொருளாளர் எஸ்.எம்.கான் உட்பட சம்மேளனத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் இந்த சுற்றுப் போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்ற மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர், செயலாளர் எம்.ஏ.முஹம்மட் றஜி உட்பட கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-ஏ.எல்.எம்.ஷினாஸ்
No comments:
Post a Comment