ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் உயிரைக் காப்பாற்றி அவர் ஜனாதிபாயவதற்கு காரணமாய் அமைந்தது தானே என உரிமை கொண்டாடுகிறார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பொலிஸ் உளவாளி நாமல் குமார.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபே ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய முயற்சி நடப்பதாக 2018 ல் சர்ச்சை உருவாகியிருந்த அதேவேளை ஒக்டோபர் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆட்சியைக் கலைக்கவும் முயற்சி செய்திருந்தார்.
இந்நிலையில், அந்த தகவல்களை வெளியிட்டு அதனூடாக ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் உயிரைத் தான் காப்பாற்றியிருப்பதாகவும் ஆனாலும் தனக்கு இதுவரை போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனவும் குறித்த நபர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment