தற்போது முன் வைக்கப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்ட வரைபை ஆதரிப்பது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குத் தாமே குழி தோண்டிக் கொள்வதற்குச் சமனானது என எச்சரித்துள்ளார் ஜே.வி.பியின் விஜித ஹேரத்.
20ஐ நிறைவேற்ற முன்பாகவே முழுமையான ஒரு சர்வாதிகாரியாக கோட்டாபே உருவெடுத்துள்ளதாகவும் எதையும் எதிர்த்துப் பேச முடியாத சூழ்நிலைக்குள் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் முடங்கிப் போயிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், 20 நிறைவேற்றப்பட்டால் அது முதலில் பாதிக்கப் போவது ஆளுங்கட்சியினரையே என எச்சரித்துள்ளார்.
இதேவேளை, உத்தேச திருத்தச் சட்ட வரைபினால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக சமகி ஜன பல வேகயவின் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment