வழமையாக ஈஸ்டர் தினத்தில் விசேட வழிபாட்டை முன்நின்று நடாத்தும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் கடந்த வருட வழிபாட்டைத் தவிர்த்ததன் காரணம், தாக்குதல் பற்றி அவருக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தமையாக இருக்கலாம் என ஹரின் பெர்னான்டோ தெரிவித்த கருத்தினால் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் அசாதாரண சூழ்நிலை உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்டினலையும் விசாரித்தறிய வேண்டும் என ஹரின் தெரிவித்திருந்தமை விசாரணையில் புதிய கோணங்களைத் திறந்து விட்டுள்ள அதேவேளை தனது தந்தைக்குத் தகவல் வழங்கியதும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவரே என ஹரின் சுட்டிக்காட்டியள்ளார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் கார்டினலிடம் விசாரணை நடாத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ள அதேவேளை ஹரின் பெர்னான்டோ ஆதாரங்கள் எதுவுமில்லாமல் இவ்வாறு கருத்துரைத்திருப்பதாக அரசு தரப்பு விளக்கமளிக்க முனைகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment