இலங்கையின் சீனாவுக்கான அரச பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ளார் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றிய Dr. பாலித கொஹொனா.
முன்னாள் ஐ.நா வதிவிட பிரதிநிநிதியாகவும் பணியாற்றியிருந்த அவரை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நேரடியாக பரிந்துரை செய்ததன் பின்னணியில் இந்நியமனம் இடம்பெற்றதாக வெளியுறவுத்துறை அமைச்சு விளக்கமளித்துள்ளது.
2006 முதல் 2009 வரை வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த பாலித, 2015 முதல் ஐ.நாவில் பணியாற்றியிருந்ததோடு, கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்த வியத்மக அமைப்பிலும் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment