வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி காணிக்கோப்பையடி வீதியில் கைவிடப்பட்ட கார் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22.09.2020) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர தெரிவித்தார்.
குறித்த கார் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று காரினுல் இருந்த ஆவனங்களை வைத்து உறுதி செய்துள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர தெரிவித்தார்.
கொழும்பு பகுதியில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல வாகனங்கள் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தரவின் வழிகாட்லில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தலைமையிலான குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.கே.ஜி.திஸ்ஸ தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களான ஆர்.எம்.ஜி.விஜயசிங்ஹ, ஜே.டபள்யூ.குமார, எஸ்.என்.எஸ்.பி.எஸ்.சேமசிங்ஹ ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு சென்று காரை கைப்பற்றியதுடன் அது தொடர்பான விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் ஓட்டமாவடி பிரதேசத்தில் கடத்தப்பட்ட கார் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் கார் கடத்தல் தொர்பில் பலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரனைகள் இடம் பெற்று வருவதாகவும் இந்த வாகன கடத்தல் கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment