ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதோடு குறித்த காலப்பகுதியில் அதிகாரிகளின் அலட்சியமும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் துறை பொறுப்பாளர் என சிரேஷ்ட அதிகாரிகள் முழுமையான அலட்சியத்தில் இருந்துள்ளதாக இதுவரையான விசாரணைகளில் புலப்பட்டு வருகின்ற அதேவேளை, ஒவ்வொருவரும் இன்னொரு இடத்தை விரல் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அக்காலப் பகுதியின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன் கூட்டியே பெறப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லையெனவும் அதேவேளை, தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பையேற்கும்படி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை மைத்ரிபால வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 20ம் திகதியே அரச புலனாய்வுத்துறை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனது கைத்தொலைபேசி அழைப்புகளை தவிர்க்க ஆரம்பித்துள்ளதுடன் விசாரணையின் போது 'சைலன்ட்' மோடில் வைத்திருந்ததாக அவர் பதிலுமளித்துள்ளார். இந்தியா பல தடவைகள் எச்சரித்தும் அதனையும் மீறி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பாதுகாப்பு உயரதிகாரிகள் மத்தியில் தொடர்பாடல் பிரச்சினைகள் இருந்துள்ளமை புலப்பட்டுள்ளது. எனினும், நிலந்த நாளொன்றுன்கு ஏழு - எட்டு தடவைகள் மைத்ரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடி வந்தவர் எனவும் அவர் முன் கூட்டியே புலனாய்வுத் தகவலைத் தெரிவிக்கத் தவறியிருப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment