மாணவர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத் தொகுதி ஒன்று வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் (04) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment