தேங்காய் விலை வெகுவாக உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டு வரும் நிலையில் மூன்று வகையான அளவுகளின் அடிப்படையிலான உச்ச கட்ட சில்லறை விலையை அறிவித்துள்ளது அரசு.
இதனடிப்படையில், 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காயின் விலை 70 ரூபா எனவும், 12 - 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபா எனவும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காயின் விலை 60 ரூபா எனவும் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விலை நிர்ணயத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment