ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 20வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தனது தந்தையின் மரணம் விபத்தால் ஏற்பட்டதென ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார் அவரது புதல்வர் அமான் அஷ்ரப்.
மர்ஹும் அஷ்ரபின் மறைவு குறித்து கருத்துரைத்துள்ள அவர், தான் யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லையாயினும் 20 வருடங்களுக்கு முன் இதே தினம் இடம்பெற்ற ஹெலிகப்டர் சம்பவத்தினை வெறும் விபத்தாகப் பார்க்கவில்லையெனவும் அதற்குப் பின்னணியில் வேறு விடயங்களும் இருப்பதாகத் தான் கருதுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் அஷ்ரபை இலக்கு வைத்திருந்தது ஒரு புறமிருக்க, மிக வேகமாக வளர்ச்சி கண்ட இனரீதியிலான அரசியல் தலைவர் என்கின்ற அடிப்படையில் அவருக்கு எதிரான வேறு பல கோணங்களும் இருந்ததாக அமான் தெரிவிக்கின்ற அதேவேளை, இன்றளவிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி அஷ்ரபின் படத்தைக் காண்பித்தே வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment