அளவு பார்த்து தேங்காய் கொள்வனவு: சஷீந்ர விசனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 September 2020

அளவு பார்த்து தேங்காய் கொள்வனவு: சஷீந்ர விசனம்!

 


அரசாங்கத்தின் அளவுக்கேற்ப தேங்காய் விலை நிர்ணய சூத்திரத்துக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது.


பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திலிருந்தும் எதிர்க்குரல் எழுப்பப்பட்டுள்ளது.


தேங்காய் வாங்குவதற்கு டேப் ஒன்றையும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலையானது கேலிக்கூத்து என இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ச தெரிவிக்கிறார். இதேவேளை, நிர்ணய விலையை மீறுவோருக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இலங்கையில் 'அங்குலத்தில்' அளவிடும் வழக்கம் இல்லையெனவும் ஜே.வி.பி தலைவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment