இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதை அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஐ.நாவின் 75 வருட நிறைவையிட்டு ஜனாதிபதி முன்கூட்டி பதிவு செய்து அனுப்பியுள்ள தகவலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை உள்நாட்டு பொறிமுறையினாலேயே சாத்தியமானது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில நாடுகளின் தேவைக்காக ஏனைய நாடுகளை இக்கட்டுக்குள் தள்ளும் அமைப்பாகவன்றி ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் அமைப்பாக இயங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment