அறிவுரையை கேட்டு நடக்கும் ஜனாதிபதிக்கு பௌத்த கவுன்சில் பாராட்டு - sonakar.com

Post Top Ad

Saturday, 19 September 2020

அறிவுரையை கேட்டு நடக்கும் ஜனாதிபதிக்கு பௌத்த கவுன்சில் பாராட்டு



பௌத்த கவுன்சிலின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்கும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு அச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.


ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட குறித்த அமைப்பில் முக்கிய பௌத்த துறவிகள் பங்கேற்பதோடு தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்துமிருந்தனர்.


இந்நிலையில், ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் திருப்தி காண்பதாகவும் தமது அறிவுரைகளை அவர் கேட்டு நடப்பதாகவும் கவுன்சில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment