ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை முக்கியஸ்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் பாதாள உலக பேர்வழி பொடி லசி தான் அவ்வாறு செய்யவில்லையென நீதிமன்றில் கண்ணீர் மல்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பூசா முகாமில் கைதிகள் உண்ணாவிரதமிருநத வேளையிலேயே இவ்வாறு மரண எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிப்பதோடு கொஸ்கொட தாரக்க எனும் பாதாள உலக பேர்வழியை முதலாவது நபராக இணைத்துள்ளனர்.
மாகந்துரே மதுஷிடமும் விசாரணை நடாத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் குறித்த நபரை ஒக்டோபர் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment