அரசாங்கத்தின் முதல் அடி சறுக்கி விட்டது: மனோ - sonakar.com

Post Top Ad

Sunday, 20 September 2020

அரசாங்கத்தின் முதல் அடி சறுக்கி விட்டது: மனோ



சிறுபான்மை கட்சிகளோடு கூட்டிணைவதில்லையென தெரிவித்து, அடுத்த 20 வருடங்களுக்கு ராஜபக்க குடும்ப ஆட்சி தான் என தெரிவித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் தமக்கிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் தமது முதல் அடியிலேயே சறுக்கியிருப்பதாகவும் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தவித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் மனோ கணேசன்.


இந்நிலையில், தமது கூட்டணி, முஸ்லிம் கட்சிகளுக்கும் அரச தரப்பிலிருந்து 'அழைப்பு' வந்திருப்பதாகவும் அவை தொடர்பில் தீர ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். 19ம் திருத்தச் சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதன்று எனவும் அதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே சிவில் சமூகத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளே அவையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


19 ஐ நீக்கினால் 18 தானாக அமுலுக்கு வரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், 18ம் திருத்தச் சட்டத்தை ஏகபோகமாக ஆதரித்து, பின்னர் தவறிழைத்ததாகவும் கூறிய முஸ்லிம் கட்சிகள் மீண்டும் அரசுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Suhood MIY said...

அரசர்கள் தவறு இழைத்தால் தெய்வம் சிறிது சிறிதாகவே தண்டனை கொடுக்கும் என்பது முதுமொழி. ஏற்கனவே கிழக்கில் திகாமடுல்லவும் tடக்கில் வன்னியும் சிறந்த பாடத்தைக் கற்பித்துவிட்டன. இவரகளது எதிர்கால போக்கை வைத்தே ஏனைய மாவட்டங்கள் தண்டனையை வழங்கும்.

Post a Comment