சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளுங்கட்சிக்கு சார்பாக மாத்திரம் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
கட்சித் தலைவர்களுக்கான பேசும் உரிமைகளை தன்னிச்சையாக ஆளுங்கட்சிக்கு சார்பாக நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வாதிகாரத்துக்குத் துணை போகும் வகையில் அவர் நடந்து கொள்வதாகவும் அநுர விசனம் வெளியிட்டுள்ளார்.
சபை அமர்வுகளின் போது கடுமையான பக்க சார்பு வெளிப்படுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment