மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்த கருத்துக்குள் ஆளுங்கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்து கட்சித் தலைமை விசாரணை நடாத்த வேண்டும் என கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாடு என்ற அடிப்படையில் மாகாண முறையிலான அதிகார பகிர்வு அவசியமில்லையென அவர் தெரிவிக்கின்ற அதேவேளை மாகாண சபைகள் ஊடாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் கடந்த அரசில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment