பாதுகாப்பு கவுன்சிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முடிவுகளுக்கு மறு பேச்சு இருக்கவில்லையெனவும் அவ்வாறு அவரது முடிவுகளை எதிர்த்து ஆலோசனை வழங்குவது கூட உறுப்பினர்களால் தவிர்க்கப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மைத்ரி ஒரு முடிவை அறிவித்தால் அதற்கு மாற்றமாக ஆலோசனை வழங்குவதற்குக் கூட ரணில் உட்பட ஏனையோர் தயங்கியதாக விளக்கமளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பூஜிதவை பொறுப்பேற்கும் படி மைத்ரி வலியுறுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ள அதேவேளை மைத்ரி அதனை மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment