ஊவா மாகாணத்தின் 13 வது ஆளுநராக ஏ. ஜே. எம். முஸம்மில் கடமையைப் பொறுப்பேற்கும் வைபவம் ஊவா மாகாண சபையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆளுநர் பதுளை நகரில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பொலிஸாரின் அணி வகுப்பு அரச மரியாதை மற்றும் சமய ஆசீர் வாதங்களுடன் இடம்பெற்ற இந்த வைபவத்திற்கு அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா இராஜாங்க அமைச்சர் தேனுக விதான கமகே, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, செந்தில் தொண்டான், ஊவா மாகாண பிரதான செயலாளர் பீ. வீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் சந்தியா அம்பன்வெல ஆகிய அரசியல் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment