கொரோனா சூழ்நிலையிலிருந்து பொது மக்களுக்கு 100 வீத பாதுகாப்பு இருப்பதற்கான உத்தரவாதத்தினை சுகாதார அதிகாரிகள் தரும் வரை வழமையான விமானப் போக்குவரத்துக்காக இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்படாது என்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
தற்சமயம் இலங்கையிலிருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் இயங்குகின்ற போதிலும் பெரும்பாலும் வெளிநாடுகளில் முடங்கியுள்ளவர்கள் நாடு திரும்ப மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் பெருமளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் தொடர்ச்சியாக அறிவிக்கப்படுகின்ற நிலையில், அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment