மத்தள விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோருக்கு விசேட சலுகை விலை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்தம் சுமார் 2 லட்சம் பேர் இவ்வாறு இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணிக்கும் அதேவேளை அதில் 20 வீதமானோர் மத்தள விமான நிலையத்தை நெருங்கிய மாவட்டங்களிலிருந்தே பயணிப்பதாகவும் இதனால் இவ்வாறான ஒரு திட்டம் ஊடாக மத்தள விமான நிலையத்தை உபயோகிக்க ஊக்குவிக்கப் போவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து, மத்தள விமான நிலையத்துக்கு குறிப்பிட்ட சில விமான சேவைகளே தொடர்ந்தும் ஆதரவளித்திருத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment