நான் பௌத்த சாசனத்தைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன் என்று பண்டைய காலத்தில் துட்டகைமுனு மன்னன் சொன்னதற்குப் பின்னர் இப்போது ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவே பகிரங்கமாக அந்த நிலைப்பாட்டை அறிவித்த தலைவர் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
கி.மு 161 - 137 காலத்தில் இலங்கையை ஆண்டதாக மகாவம்சம் ஊடாக அறியப்படும் துட்டகைமுனு மன்னன் இலங்கையில் பௌத்தத்தை நிறுவி அதனைக் காப்பாற்றுவதே தனது தலையாய கடமையெனக் கூறியிருந்ததாகவும் அதன் பின்னர் இப்போது கோட்டாபே ராஜபக்சவே அவ்வாறு இயங்குவதாகவும் கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
அந்த வகையில் தெவனகல உட்பட பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்ப தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேவைப்பட்டால் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment