இலங்கையில் மாடறுப்பு தடைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன் வைத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடென்ற அடிப்படையில் பால் மா இறக்குமதிக்காக செலவிடப்படும் பெருந்தொகை பணத்தைக் குறைத்து, உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தேவைப்படுவதாக குறித்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாட்டிறைச்சியை உண்போருக்கு அது கிடைக்கும் வகையில் இறக்குமதி செய்து சலுகை விலையில் விற்பனை செய்வதற்கும் அரசு நடவடிக்கையெடுக்கும் என விளக்கமளிக்கப்படுகின்றமையும் இதனை அமைச்சரவை ஆமோதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2 comments:
இதுவெல்லாம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான் ஆனாலும் நாங்கள் இறைச்சி சாப்பிடாமல் விட்டால் இறந்து போக மாட்டோம்,இந்த தடையினால் இன்ஷா அல்லாஹ் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக இருப்பவர்கள் பெரும்பான்மை மக்களும் அரசும் தான்,அரசு வரி வருமானம் மற்றும் வேலையில்லாத மக்களுக்கு வேலைகளை பெற்று கொடுக்க வேண்டும்.
Yes true
Post a Comment