மாத்தளை பிரதேச சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இனி மாட்டிறைச்சி விற்பனைக்கான புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பலாபத்வலயில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில், தலைவர் கபில பண்டார தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் பிரதேசத்தில் மாடறுப்பு மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
1 comment:
மிகவும் போற்றப்படக்கூடிய முடிவு. இதனை நாட்டின் சகல உள்ளுராட்சி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். இதுவரை காலமும் மக்கள் மிகவும் அதிக விலை கொடுத்தே மாட்டிறைச்சியினை கொள்வனவு செய்தனர். ஏன் இவ்வளவு விலை என்று கேட்டால் டெண்டர் மூலம் பெறப்படும் பணம் முழுவதும். அரசின் செலவீனங்களை ஈடு செய்வதற்காக கொடுக்கப்படுகின்றது எனக் கூறுகின்றார்கள். இப்படித்தான் நாட்டிலுள்ள மதுபான நிலையங்கள், மசாஜ் நிலையங்கள், போதைப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் விபசார நிலையங்கள் கசினோ சூதாட்ட நிலையங்கள் போன்ற நிலையங்களும் கூறி வருகின்றன. எப்படியிருப்பினும் மக்கள் இனி மிகவும் குறைந்த விலைக்கே மாட்டிறைச்சியினை பெற்றுக் கொள்ள முடியும் என்றே நம்புகின்றோம். அதுபோல் மசாஜ் நிலையங்கள், போதைப் பொருள் விற்பனை நிலையங்கள், கசினோ சூதாட்ட நிலையங்கள் மற்றும் விபசார நிலையங்களின் வரிகளையும் குறைக்கும் அல்லது இல்லாமல் செய்கின்றபோது எமது நாட்டு இளைஞர்களையும் இன்னமும் "திருமணம் செய்யாதவர்" களையும் ஊக்குவிப்பதாகவும் அமையலாம்.
Post a Comment