கட்டிட இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 20 September 2020

கட்டிட இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு



கண்டி, புவெலிகட பகுதியில் இன்று காலை ஐந்து மாடி கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்திருந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டிடம் சரிந்து வீழ்ந்த வீட்டில் இருந்தே ஒன்றரை மாத கைக் குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டிருந்தனர்.


எனினும், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment